ஆரோக்கியம் :
இடுப்பு பகுதிகளில் சுளுக்கு, நரம்பு பாதிப்பு, தசைபிடிப்பு போன்ற உபாதைகள் ஏற்படும். ஆகவே நடந்து செல்லும் போது கவனம் தேவை, தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சிலருக்கு வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
பொருளாதாரம் :
ராசிக்கு 2ஆம் இடத்தில் ராகு பகவான் நிற்பதால் பேச்சில் கவனம் தேவை. வரவுகள் தாமதமாகவே வந்து சேரும். பாக்கிகள் இழுபறியில் இருக்கும். பொருளாதார தாமதித்தால் குடும்பத்தில் பல குழப்பங்கள் உருவாகும். பொறுமையுடன், நிதானத்துடன் வசூலில் இறங்கவும். பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்ப்பது சிறப்பு.
புகழ் :
ஆன்மிக வழியில் ஈடுபடுவோர்கள் பிரபலம் அடைவார்கள். மனைவி உங்களின் ஆன்மீக பணிக்கு உறுதுணையாக அமைவார். வெளிவட்டார புகழ் அதிகரிக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது சிறப்பு.
வரவேண்டிய வரவுகள் :
வரவேண்டிய வரவுகளில் தாமத போக்கே இருக்கும். இதற்காக கோபத்தை பாராட்டாமல், பொறுமையுடன் நடந்து கொள்வதால் வரவுகள் பின்னப்படாமல் வந்து சேரும். அடக்கு முறையையும், வேகத்தையும் காட்டுவதால் வரவுகளை முழுமையாக இழக்க நேரிடும். ஆகவே பொறுப்புடன் நடந்து வசூலை சரி செய்வது உத்தமம்.
வாகனமும் வருமானமும் :
கால்நடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு கால்நடைகளுக்கு திடீர் நோய் தாக்குதல்கள் ஏற்படும். வாகன தொழில் செய்பவர்களுக்கு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீட்டின் மூலம் வாடகை பெறுவோருக்கு சரியான வாடகைதாரர்கள் வராமலும், இருக்கும் வாடகைதாரர்களால் சங்கடமான சூழ்நிலையும் உருவாகும். எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
வீணான தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே கவனமுடன் செயல்படவும். கோர்ட், போலீஸ் ஸ்டேசன் போன்ற காரியங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சிலருக்கு அரசியலை விட்டு வெளியேறும் சூழ்நிலை உண்டாகும். முகத்திற்கு நேராக மகிழ்வுடன் பேசுபவர்கள், பின்னால் சென்று தூற்றுவார்கள். சகிப்பு தன்மை வேண்டும்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் விளையாட்டு போக்கினை தவிர்த்து, கவனம் செலுத்தி படிப்பது மிகவும் அவசியமாகும். உயர்கல்வி பயில்வோருக்கு கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தொழில் கல்வி பயில்வோருக்கு வேலை வாய்ப்புகள் அமையும்.
வியாபாரிகளுக்கு :
வெளி இடங்களில் புகழ் இருக்கும், சரக்கு நன்மதிப்பையும், நல்ல ஆர்டர்களையும் பெற்று தரும். வரவேண்டிய வசூல்களில் காலதாமதம் ஏற்படும். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுமையை கடைபிடிக்கவும், இல்லாவிட்டால் வெறுங்கையுடன் வெளியேற நேரிடும். மூத்த சகோதிரர் தொழிலுக்கு ஆதரவு கரம் நீட்டுவார். பிரபலமானவர்களின் உதவிகள் உறுதுணையாக அமையும். தந்தையின் வழிகாட்டுதல் சிறப்பான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு இந்த கால கட்டங்களில் கோபம் அதிகமாகும். கோபத்தை பாராட்டாமல் குடும்ப ஒற்றுமையை மனதில் கொண்டு செயல்படுவதன் மூலம் நற்பெயர் உண்டாகும். சிலருக்கு வாக்கு வாதங்கள் முற்றி, பிரிவினைக்கு வழி ஏற்படும். உறவினர்களின் பேச்சில் உள்ள உண்மையை ஆராய்ந்து செயல்படுவது முக்கியமாகும். மன சஞ்சலம் அதிகரிக்கும். தாயின் தவறான வழிகாட்டுதலால் மன வருத்தம் உண்டாகும். தந்தையின் வழிகாட்டுதல் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். தந்தை இல்லாதவர்கள் தந்தையாக நினைப்பவர்களிடம் ஆலோசனை பெறலாம். ஆன்மீகம் அமைதியை தரும்.
பரிகாரம் :
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு மலையில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்படையும். 5 அமாவாசைகளில் விரதத்துடன் மலையேறி வழியில் உள்ள நாகரை தரிசித்து, தீபமேற்றி வழிபட்டு பின்னர் மலை மேல் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் - மனைவி உறவு பலப்படும்.
No comments:
Post a Comment