ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்படையும். இருப்பினும் சிலருக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அக்கறை தேவை. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியமாகும். உடல் உபாதைகள் சிறிய அளவில் உள்ளபோதே கவனிப்பதன் பொருட்டு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். மின்சாரம், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியமாகும்.
பொருளாதாரம் :
குடும்பத்தின் வருமான நிலை உயரும். அலைச்சல் உள்ள அளவிற்கு வருமான நிலை அதிகரிக்கும். மனைவியின் வருமான நிலை சிறப்பாக அமையும். வருமானத்திற்கேற்ற சுப விரயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களால் தொழில் முதலீட்டை அதிகரிப்பீர்கள்.
புகழ் :
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சில அவமதிப்புகளும், கடுமையான விமர்சனங்களும் உண்டாகும். கோபத்தை காட்டாமல் பொறுமையுடன் செயல்படவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் புகழின் உச்சியை அடைவீர்கள். ஆன்மிகம் தன்னம்பிக்கையை உண்டாக்கும்.
வரவேண்டிய வரவுகள் :
வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். முயற்சிகளை தீவிரபடுத்துவதன் மூலம் முழுமையாக வரவுகள் வந்து சேரும். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். சண்டை போடாமல் வசூல் செய்வதன் மூலம் வரவுகள் வந்து சேரும்.
வாகனமும் வருமானமும் :
கால்நடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு, கால்நடைகளின் மூலம் வருமானம் மத்திமமாக அமையும். வாகனத்தின் மூலம் வருமானம் பெறுவோர்க்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையே அமையும். வீடு வாடகை மற்றும் பொருட்கள் மீது அடமானம் வாங்குவோருக்கு சிறப்பான காலமிது.
உத்தியோகஸ்தர்களுக்கு :
அலுவலக பணியாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய, இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியமாகும். பணி சார்ந்த பயிற்சிக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகள் செல்ல நேரிடும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வருமானத்தை அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
எதிரிகளின் கை ஓங்கி நிற்கும். பெயருக்கும், புகழுக்கும் சற்று கடுமையான சோதனைகள் ஏற்படும். எதிர்ப்பும், அவமானமும் மன உளைச்சலை அதிகரிக்கும் மகான்களின் ஆசியினால் சுப பலன்களை அடையலாம்.
மாணவர்களுக்கு :
கல்வியில் சற்று அதிகப்படியான முயற்சி செய்வது அவசியமாகும். அடிப்படை கல்வி பயில்வோருக்கு சிறப்பான காலமிது. வகுப்பில் மற்றும் போட்டிகளில் முதலிடம் பெறுவார்கள். உயர்கல்வி பயில்வோருக்கு மத்திமமாகவே அமையும். தொழிற்கல்வி பயில்வோர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவது அவசியமாகும். வேலை வாய்ப்புகள் சற்று தாமதப்பட்டே அமையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு தொழிலில் சற்று மந்த தன்மையே காணப்படும். ஏஜென்சீஸ், கமிஷன் போன்ற தொழில் செய்பவர்களுக்கு வருமான நிலை சிறப்பாக அமையும். உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோருக்கு, தொழில் முடக்கம் ஏற்படும். இதன் காரணமாக முதலீட்டை அதிகரிக்க கடன்பெற நேரிடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.
பெண்களுக்கு :
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சிலர் புரிதல் இல்லாமல் பிரிவினைக்கு வழி கோலுவார்கள். ஆகவே சமரச பேச்சு சிறப்பை தரும். பெண்கள் விட்டுக்கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் வருத்தங்களை தவிர்க்கலாம். பெண்களின் சிறு சேமிப்பு கரையும். உடல்நலனில் அக்கறை தேவை. நிம்மதியான தூக்கம் ஏற்படும். தந்தை வீட்டு உறவினர்களிடம் பகைமை பெரிதுபடுத்தாமல் இருப்பது உத்தமமாகும். வேலை தேடும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். முயற்சியை அதிகப்படுத்துவது அவசியமாகும். உடல் மற்றும் மனதில் சோர்வு ஏற்படும். காலில் புண்கள் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம்.
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைந்து சுபிட்சங்கள் ஏற்படும். உங்களின் ராசியின் சின்னமாகிய பசுவிற்கு பௌர்ணமி தினங்களில் அகத்திக்கீரை, தட்டு, பழங்கள் போன்ற உணவு பொருட்களை வழங்கி, வணங்கி வருவதன் மூலம் சுப பலன்கள் அனைத்தும் நடந்து மகிழ்ச்சிகள் உண்டாகும்.
No comments:
Post a Comment