ஆரோக்கியம் :
ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.
பொருளாதாரம் :
ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 7 ஆம் இடத்தில் நின்று சிறப்பு பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார வரவுகள் முயற்சிக்கேற்ப அமையும். முன்னேற்றம் மிகச் சிறப்பாக அமையும். வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும்.
ஆன்மிகம் :
பத்தாம் அதிபதி சனிபகவான் 9ல் நின்று தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துவதால், ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு குலதெய்வ பணியை மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும். பொதுநல சேவைகளில் ஈடுபடுவோருக்கு பாராட்டுக்களும், கௌரவமும் உண்டாகும்.
வரவுகள் :
உங்களுக்கு வந்து சேர வேண்டிய வரவுகளில் சற்று தாமதம் ஏற்பட்டே வரும். இருப்பினும் வந்து சேரும். முழுமையாக ஒரே முறையாக வராமல் தவணை முறையிலேயே வந்து சேரும்.
வாகனமும், வருமானமும் :
கால்நடைகள் வைத்து பராமரிப்பவர்களுக்கு சிறப்பான காலமிது. புதிய வாகன யோகம் உண்டாகும். டிராவல்ஸ் போன்ற வாகனம் சார்ந்த நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு வரவுகள் இருப்பினும் வரவுக்கேற்ற பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு :
மேலதிகாரிகளிடம் சற்று பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். மறைமுக எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படும். இருப்பினும் அனைத்து துறையிலும் வெற்றிக் கொடி நாட்டூவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
இந்த ராசியை சார்ந்தவர்கள் புதிதாக அரசியலுக்கு நுழைய வாய்ப்புகள் உருவாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். புகழ் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்து உள்ளவர்களுக்கு சிறப்பான காலமிது.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வகுப்பில் முதல் இடம் பெறுவார்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் அமையும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் ரீதியான வர்த்தக நிலை உயரும். வியாபார நிலை சிறப்பாக அமையும். இருப்பினும் வரவுகளில் மத்தி நிலையே காணப்படும். பேச்சில் பொறுமையை கையாள்வதன் மூலம் வியாபார அபிவிருத்தி உண்டாகும். வியாபார ரீதியாக ஜாமீன் போடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.
பெண்களுக்கு :
பெண்கள் தந்தையின் ஆதரவால் சிறப்பிக்கப்படுவார்கள். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் அமைதியை கடைபிடிக்கவும். கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். உறவினர்களிடம் அதிக நெருக்கத்தை தவிர்ப்பது குடும்ப அமைதிக்கு உறுதுணையாக இருக்கும். வீடு, வாகன யோகம் ஏற்படும். உங்களின் ஆலோசனை குடும்ப முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.
பரிகாரம் :
அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகப் பெருமானை தினமும் வணங்கி, வருவதால் சிரமங்கள் அனைத்தும் குறைந்து சிறப்பான வாழ்க்கை அமையும்.
மேலும் மரத்தை சுற்றி வரும் போது, மரத்திற்கு அருகில் எறும்புகளுக்கு உணவாக பச்சரிசியும், சர்க்கரையும் சேர்த்து அரைத்து உணவிட்டு வருவதன் மூலம் அனைத்து சிறப்பான பலன்களையும் பெறலாம்.
No comments:
Post a Comment